Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது

மார்த்தாண்டம்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது

0

கருங்கல் அருகே பெருமாங்குழி பகுதி சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி அனுப்பிரியா (26). இவர் சம்பவ தினம் தனது 2 வயது குழந்தையுடன் கருங்கலில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்ஸில் சென்றார். மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்தபோது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அனுப்பிரியா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் அனுப்பிரியாவின் குழந்தையிடமிருந்து செயினை திருடியது குளச்சல், கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த சுதாகரன் என்பவரின் மனைவி அஸ்வினி (27) என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று கருங்கல் பகுதியில் சுற்றித்திரிந்த அஸ்வினியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வேறு திருட்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version