Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: லோடு மேனை தாக்கிய கொத்தனார்

மார்த்தாண்டம்: லோடு மேனை தாக்கிய கொத்தனார்

0

மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (35), இவர் லோடுமேன் ஆகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சஜின் (25) என்ற கொத்தனாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று ஜஸ்டின் இடம் சஜின் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். மேலும் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் ஜஸ்டின் படுகாயம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஜினைத் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version