மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. எனவே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் சீரமைப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் உள்ள ஜல்லியும் தாரும் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த சாலை மீண்டும் முன்பு போல மாறி உள்ளது.