Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மார்த்தாண்டம்: போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. 

மார்த்தாண்டம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். குழித்துறை சந்திப்பிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வெட்டுவெந்நீர் வழியாக மார்த்தாண்டம் சந்திப்பில் சென்றடைந்தது. 

பேரணியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விதிமுறைகள் மீறப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேல் ஆட்டோ பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version