மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17வது மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்பு குழு அலுவலக திறப்பு விழா நேற்று (ஜூலை 31) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வரவேற்பு குழு தலைவர் லேகா தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ லீலாரோஸ், மாநில துணை தலைவர் உஷாபாசி, பொது செயலாளர் ராதிகா, மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லா பாய், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.














