உண்ணாமலைகடை பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கடந்த 15ஆம் தேதி தாசில்தார் மற்றும் போலீசார் கோவில் சிலை மற்றும் சிவலிங்கத்தை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் மார்த்தாண்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், நேற்று இந்து அமைப்புகள் சார்பில் உண்ணாமலை கடை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, போலீசார் தடை விதித்து 150 பேரை கைது செய்தனர்.














