ஆறுகாணி பகுதியை சேர்ந்த உண்ணி, பத்துகாணி பகுதியை சேர்ந்த சஜி, பேணு பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் இன்று (17-ம் தேதி) மதியம் குழித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வட்டவிளை பகுதியில் சென்றபோது எதிரே இரண்டு லாரிகள் வந்து கொண்டிருந்தன. இந்த லாரிகளை முந்தி சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக இவர்கள் 3 பேரும் சென்ற இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.