மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (70). விவசாயி. இவர் சம்பவ தினம் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதிக்குச் சென்றிருந்தார்.
அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சொந்த வேலைக் காரணமாகச் சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்து மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடிச் சென்றிருந்ததை அறிந்தார். இதுகுறித்து சுரேஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கும்பாலிகோணம் பகுதியைச் சேர்ந்த லிபின், வர்க்கீஸ் ஆகிய இரண்டு பேரை நேற்று (30-ம் தேதி) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.