ஒருநாள் போட்டி தரவரிசையில் மந்தனா முதலிடம்

0
22

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்க வைத்​துக் கொண்​டுள்​ளார். கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 652 புள்​ளி​களு​டன் 8-வது இடத்​தில் தொடர்​கிறார்.

அதேவேளை​யில் மற்​றொரு நட்​சத்​திர வீராங்​க​னை​யான ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஓர் இடத்தை இழந்து 12-வது இடத்துக்கு தள்​ளப்​பட்​டார். ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 157 ரன்​கள் விளாசிய நியூஸிலாந்து அணி​யின் புரூக் ஹலிடே 644 புள்​ளி​களு​டன் 8 இடங்​கள் முன்​னேறி 11-வது இடத்தை பிடித்​துள்​ளார். மற்​றொரு நியூஸிலாந்து வீராங்​க​னை​யான மேடி கிரீன் 584 புள்​ளி​களு​டன் 4 இடங்கள் முன்​னேறி 23-வது இடத்தை அடைந்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here