மண்டைக்காடு:   குண்டு வீச்சு வழக்கு 2 பேர் கைது

0
271

மண்டைக்காடு அடுத்த கருமன்கூடல் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (57). கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அதிகாலை பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு வளாகத்தில் நின்ற கார் தீப்பிடித்து எரிந்தது.

     இந்த சம்பவம் தொடர்பாக மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.    இது தொடர்பாக போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்திருந்தனர்.   தற்போது இந்த வழக்கு தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதை எடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.

        இந்த நிலையில் தேடி வந்த ஆதில் இமான், முகமது நபில் ஆகியோர் நெல்லையில்  பதுங்கி இருப்பதாக செல்போன் டவர் மூலம் கிடைத்த தகவலையடுத்து இரண்டு பேரையும் நேற்று (7ம் தேதி) நெல்லை பெருமாள்புரத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர்  நேற்று இரவு கோர்ட்டில் ஒப்படைத்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here