மண்டைக்காடு அருகே அழகன்பாறையை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி ஆன்றலின் சுஜா (47). வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். சுய உதவிக்குழுக்களில் பணம் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்த வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வின்சென்ட் வேலைக்குச் சென்று விட்டார். மகன் கல்லூரிச் சென்று, மாலையில் வரும்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து மகன் உள்ளே சென்று பார்க்கும்போது சுஜா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.