Home கன்னியாகுமரி செய்திகள் மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

0

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான கூரை பணிகள் ஆகியவை நிறைவடைந்துள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மே மாதம் 11ஆம் தேதி ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை அடுத்து மே 7ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் துவங்குகின்றன. இதற்காக கும்பாபிஷேக யாகசாலை கால்நாட்டு விழா நேற்று நடந்தது. கோயில் தந்திரி சங்கரநாராயணன் கால் நாட்டினார். இதில் தேவசம் இணை ஆணையர் பழனிக்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version