மனவளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான மணல் ஆலை உள்ளது. இங்கு மணலை எடுத்து விட்டு திறந்த நிலையில் எல்லையை வகைப்படுத்தாமல் வைத்திருந்தனர். அந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் நேற்று(நவம்பர் 21) ஆலைக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. இதை அறிந்த அப்பகுதியினர் கூடி சுற்றுசுவர் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும், நீண்ட நாட்களாக இந்த வழியாக சென்று வருவதாகவும், எனவே பாதை வசதி செய்து தர வேண்டும் என்று கூறினார்கள். தகவல் அறிந்த மணல் ஆலை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுற்றுசுவர் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.














