மணவாளக்குறிச்சி அருகே உள்ள மூங்கில் விளை பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் (65). இவரது வீட்டின் ஓரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வில்சன் தாஸ் (69) என்பவர் பழைய பொருட்கள் மற்றும் விறகுகளை போட்டு எரித்துள்ளார். இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த சாலமன் புகையினால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகக் கூறி வேறு பகுதியில் கொண்டு சென்று எரிக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வில்சன் தாஸ், சாலமனிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சாலமன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














