மணவாளக்குறிச்சியில் ஐ ஆர் இ எல் என்ற மத்திய அரசின் மணல் ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 28 மாணவ மாணவிகள் மற்றும் ஆறு பேராசிரியர்கள் சென்று நேரில் பார்வையிட்டனர்.
இவர்களுக்கு கனிமங்களை பிரித்தெடுக்கும் செயல்முறைகளையும் அதன் பயன்பாடுகள் குறித்தும், நாட்டின் வளர்ச்சிக்கு இங்கு கிடைக்கக்கூடிய கனிமங்களின் பங்களிப்பு குறித்தும், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள். ஆலையின் செயல்முறைகளை பார்வையிட்ட பின் மாணவர்கள் கூறுகையில்: – ஐ ஆர் இ எல் ஆலை பற்றி சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் இருந்தன.
ஆனால் நேரில் பார்த்த பிறகு உண்மை நிலையை அறிவியல் ரீதியாக புரிந்துகொண்டோம். இது நமது மாவட்டத்திற்கான முக்கியமான நிறுவனம் என்பதை உணர்ந்தோம் என்று கூறினார்கள். நிகழ்ச்சியில் மணல் ஆலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.














