Home கன்னியாகுமரி செய்திகள் மணவாளகுறிச்சி: மனைவி, மாமனாரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

மணவாளகுறிச்சி: மனைவி, மாமனாரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

0

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் மனைவி சிவகலா (32). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இதனை அறிந்த சிவகலாவின் தந்தை ராஜன் மருமகனைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் மாமனாரைத் தாக்கினார். 

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரணியல் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தன்மீது ராஜன் தொடர்ந்த வழக்கைவாபஸ் பெற கேட்டு ஸ்டீபன் தனது மனைவியைக் கத்தியால் தாக்கினார். காயமடைந்த சிவகலா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மணவாளக்குறிச்சி போலீசார் இரண்டாவது முறையாக ஸ்டீபன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version