மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்பர் மகள் ஆன்சிலின் மெசி (25). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்சிலின் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு மாடியில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றார்.
மறுநாள் நீண்ட நேரமாகியும் மகள் கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடியில் உள்ள அவரது அறையில் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு ஆன்சிலின் மெசியை காணவில்லை. மகளை உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவர் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கஸ்பர் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்று (3-ம் தேதி) காலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஆன்சிலின் மெசியைத் தேடி வருகின்றனர்.














