கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று மாலையில் கோட்டார் கலைவாணர் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 24) கஞ்சா பொட்டலத்தை வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பால்ராஜின் தாயாரின் வங்கி கணக்கை போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்தனர். பால்ராஜ் மீது கோட்டார், வடசேரி, தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.














