விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்யும் மலையாளிகள்

0
18

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக வளை​குடா நாடு​களில் விமான போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இதனால் இந்​தி​யா​வுக்​கான விமான டிக்​கெட் மிகக் கடுமை​யாக உயர்ந்​திருக்​கிறது. பொது​வாக ஐக்​கிய அரசு அமீரக தலைநகர் அபு​தாபி மற்​றும் துபாய் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து இந்​திய நகரங்​களுக்கு வரு​வதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விமான கட்​ட​ணம் வசூல் செய்​யப்​பட்​டது.

போர் காரண​மாக தற்​போது விமான கட்​ட​ணம் ஒரு லட்​சம் ரூபாய் முதல் 2 லட்​சம் ரூபாய் வரை உயர்ந்​திருக்​கிறது. மிக​வும் இக்​கட்​டான நேரங்​களில் ரூ.2.5 லட்​சம் வரைகூட விமான கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

எனினும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசிக்​கும் மலை​யாளி​கள், கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க விமான டிக்​கெட்​டுக்கு ரூ.2 லட்​சம் வரை செலவு செய்து சொந்த ஊருக்கு திரும்பி வரு​கின்​றனர். இதுதொடர்​பாக முனீர் என்​பவர் கூறும்​போது, “கடந்த 19 ஆண்​டு​களாக ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வரு​கிறேன். ஒவ்​வொரு தேர்​தலின்​போதும் கேரளா​வுக்கு சென்று வாக்​களிப்​பதை வழக்​க​மாக வைத்​திருக்​கிறேன். தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காக கேரளா செல்ல ரூ.2.3 லட்​சத்​துக்கு டிக்​கெட் வாங்கி உள்​ளேன். எவ்​வளவு செல​வா​னாலும் வாக்​குரிமையை செலுத்​து​வதை கடமை​யாக கருதுகிறேன்” என்று தெரி​வித்​தார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் அஜ்​மான் நகரில் வசிக்​கும் ஆஷா என்​பவர் கூறும்​போது, “கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக சொந்த ஊருக்கு செல்ல திட்​ட​மிட்டு உள்​ளேன். இதற்​காக ஒரு லட்​சம் ரூபாய்க்கு விமான டிக்​கெட் வாங்கி உள்​ளேன். எனது தங்கை நிம்​மி​யும் இதே தொகைக்கு விமான டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருக்​கிறார்” என்​றார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் சுமார் 10 லட்​சம் மலை​யாளி​கள் உள்ளனர். அவர்​களில் பெரும்​பாலானோர் வி​மான டிக்​கெட்​டுக்கு ரூ.2 லட்​சம் வரை செலவு செய்​து கேரளா​வுக்​கு திரும்​பி வருகின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here