மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கும்: உச்ச நீதிமன்றம் கருத்து

0
15

பெண்​களுக்கு மாத​வி​டாய் விடு​முறையை கட்​டாய​மாக்​கி​னால், பெண்​களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்​டார்​கள் என கருத்து தெரி​வித்த உச்ச நீதி​மன்​றம், பொது நல மனுவை தள்​ளு​படி செய்​தது.

பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்​திர மணி திரி​பாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்தார்.

அந்த பொதுநல மனு​வில், மாத​வி​டா​யின் போது பெண்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்சி​னை​களை கருத்​தில் கொண்​டு, மாத​வி​டாய் விடுப்​புடன் கூடிய ஊதி​ய​மும், மாணவி​களுக்கு விடு​முறையும் அளிக்​கும் கொள்​கை மற்றும் உரிய சட்​டங்​களை வகுக்க மத்​திய அரசுக்​கும், மாநில அரசுகளுக்கும் உத்​தர​விட வேண்டும் என்று சைலேந்​திர மணி திரி​பாதி கோரியிருந்​தார்.

இந்த மனுவை, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் தரப்பு மூத்த வழக்​கறிஞர் எம்​.ஆர். ஷம்​சத் ஆஜராகி, மாத​வி​டாய் விடுப்பு அளிப்​பது கர்​நாடகம், ஒடிசா, கேரளத்​தில் நடை​முறை​யில் உள்​ளது என வாதிட்​டார். அப்​போது நீதிப​தி​கள் கூறிய​தாவது:

இந்த விவ​காரத்​தில் எந்​தப் பெண்​ணும் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​ய​வில்​லை. மாத​வி​டாய் விடுப்பு அளிக்க உரிமை கோரு​வது மகளிரின் வளர்ச்​சிக்கு எதி​ரான​தாக அமை​யும். தாமாக முன்​வந்து விடு​முறை அளித்​தால் அது நல்​லது. ஆனால், மாத​வி​டாய் விடு​முறையை அளிப்​பதை கட்​டாய​மாக்க கோரி சட்​டம் இயற்​றி​னால், மகளிருக்​கான வேலை​வாய்ப்பை பாதிக்​கும்.

பெண்​களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்​டார்​கள். நீதித்​துறை உள்​ளிட்ட எத்​துறை​யிலும் அவர்​களுக்கு பணி வழங்​கப்​ப​டாது. இந்த விவ​காரத்​தில் மனு​தா​ரர் அளித்​துள்ள கோரிக்கை தொடர்​பாக உரிய அமைப்பு முடி​வெடுக்க அனு​மதி அளித்து இந்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விடு​கிறோம்​. இவ்​வாறு நீதிப​தி​கள்​ தெரிவித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here