மகா​ராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு

0
16

மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது.

இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரையும் அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும்.

பிறகு இந்த தொகையை ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் இருந்து வசூலிக்க வேண்​டும். பாதிக்​கப்​படும் குடும்​பங்​களுக்கு வேறு எந்த சட்​டத்​தின் கீழ் இழப்​பீடு வழங்​கப்​பட்​டாலும் கூடு​தலாக இந்த நிவாரணம் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு தீர்ப்​பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here