சாந்தனு பாக்யராஜ் -அஞ்சலி நாயர் நடிக்கும் படத்துக்கு ‘மெஜந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். “காதல், நகைச்சுவை கலந்த படமான இது, ‘ஃபீல் குட்’ படமாக இருக்கும். படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்பட இருக்கிறது” என்றது படக்குழு. இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
Latest article
தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....
அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்
அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...
கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...








