மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீ மத் விஸ்வலிங்க தம்புரான் மனு

0
50

குற்ற வழக்​கில் தொடர்​புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்​டும், அந்த இடத்​தில் தன்னை நியமிக்க வேண்​டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான், மாவட்ட ஆட்​சி​யரிடம் நேற்று மனு அளித்​தார்.

இதுகுறித்து அளித்த மனு: மதுரை ஆதீன மடத்​தின் தம்​பு​ரா​னாக குரு​மகா சந்​நி​தானத்​தின் கரங்​களால் தீட்சை பெற்​று, கடந்த 2018 ஜூலை முதல் பணி​யாற்றி வரு​கிறேன். தற்​போது, 293-வது ஆதீனத்​தின் கீழ் தம்​பு​ரா​னாகப் பணிபுரிந்து வரு​கிறேன்.

வேறு ஒருவருக்கு பட்டம்: இந்​நிலையில் 292-வது குரு​மகா சந்​நி​தானம் விருப்​பப்படி, அடுத்த ஆதீன​மாக நான்​தான் வர வேண்​டும். ஆனால் தற்​போதைய ஆதீனம், 292-வது குரு​மகா சந்​நி​தானம் மற்​றும் தரு​மபுரம் ஆதீனத்​தின் கட்​டளையை நிறைவேற்​றாமல் வேறு ஒரு​வருக்​ குப் பட்​டம் சூட்ட திட்​ட​மிட்​டுள்ளார்.

எனவே, தரு​மபுரம் ஆதீனத்​துடன் ஆலோ​சனை செய்து 292-வது குரு​மகா சந்​நி​தானத்​தின் விருப்​பத்தை நிறைவேற்ற வேண்​டும். மேலும், மதுரை ஆதீனத்​தின் மீது குற்ற வழக்கு உள்​ள​தால் அவராகவே பதவி விலக வேண்​டும்.

மதுரை ஆதீனம் நியமனத்​தில் இந்து சமய அறநிலை​யத்​துறை தலை​யிட்​டு, 292-வது குரு​மகா சந்​நி​தானம் விருப்​பப்​படி அடுத்த வாரி​சாக என்னை நியமிக்க வேண்​டும் என குறிப்​பிட்​டுள்​ளார். ஏற்​கெனவே, இவர் இதே கோரிக்​கையை வலி​யுறுத்தி கடந்த 31-ம் தேதி 292-வது மதுரை ஆதீனத்​தின் சமாதி முன்​பாக தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here