தூய்மைப் பணியாளர்கள் சம்பளத்தை குறைக்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0
61

 சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் வகை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது என உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்​றம், தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக வாங்​கிய சம்​பளத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும் என அறி​வுறுத்​தி​ உள்​ளது.

சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் வகை​யில் மாநக​ராட்​சி​யில் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, தூய்​மைப் பணிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாருக்கு வழங்​கியதை கண்​டித்து மாநக​ராட்சி அலு​வல​கம் முன்பு துப்​புரவு பணி​யாளர்​கள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். 13 நாட்​களுக்கு பிறகு, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் அவர்​கள் அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர்.

இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்​யக் கோரி உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிபதி கே.சுரேந்​தர் முன்பு இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், “தூய்​மைப் பணி​யாளர்​களை நிரந்​தரம் செய்​யக் கோரி தொடரப்​பட்ட வழக்கு தொழிலா​ளர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

இந்த சூழலில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வ​தாக இருந்​தால் தொழிலா​ளர் நீதி​மன்​றத்​தின் அனு​ம​தியை பெற வேண்​டும். மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்​தால் சுமார் 2 ஆயிரம் ஊழியர்​கள் வேலை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது” என்று வாதிடப்​பட்​டது. மாநக​ராட்சி தரப்பில், “சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 5 மண்​டலங்​களில், ஏற்​கெனவே 11 மண்​டலங்​களில் தூய்மைப் பணி தனி​யாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டு​விட்​டது. தற்​போது ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றும் துப்​புரவு தொழிலாளர்களுக்கு தனி​யார் நிறு​வனம் அதிக ஊதி​யத்​துடன், வருங்​கால வைப்​புநி​தி, காப்​பீடு போன்ற சலுகைகளு​டன் வேலை வழங்​கும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

ஒப்​பந்த நிறு​வனம் தரப்​பில், “தூய்​மைப் பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைப்​பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதி​மீறல் இருந்​தால் மட்​டுமே நீதி​மன்​றம் தலை​யிட முடி​யும். 1,900 பணி​யாளர்​கள் இன்​னும் தேவை என்ற நிலை​யில் அவர்​கள் பணி​யில் சேரு​வதற்​கான காலக்​கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி கே.சுரேந்​தர் நேற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வு: துப்​புரவு பணி​களை தனி​யாரிடம் ஒப்​படைக்​கும் சென்னை மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது. தூய்​மைப் பணி​யாளர்​களை பணி​யில் சேர்த்​துக் கொள்​வதற்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர்​கள் பணிநீக்​கம் செய்​யப்​படு​வார்​கள் என்ற அச்​சம் தேவையற்றது. எனவே, இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம், தனி​யார் நிறு​வனத்​துடன் கலந்​துபேசி, தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக பெற்ற ஊதி​யத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்​டு, இந்த வழக்​கை நீதிபதி முடித்​துவைத்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here