மருத்துவாழ்மலை பிரதான சாலை கால்வாய் பாலம் பணி கலெக்டர் ஆய்வு

0
321

நாகர்கோவில் கோட்ட பராமரிப்பிலுள்ள முக்கிய சாலையான  அஞ்சுகிராமம் சாலை   நாகர்கோவில் நகரத்தினையும்  கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகும்.
      மேலும் உவரி, திருச்செந்தூர், துறைமுக நகரமான தூத்துக்குடி செல்லுவதற்கு  கன்னியாகுமரி  மாவட்ட மக்கள் இச்சாலையினையே பயன்படுத்துகின்றனர். இச்சாலையில்   குறுகிய பாலம் அமைந்துள்ளது.   இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.    
       எனவே இப்பாலத்தினை  பாலம் 10. 50 மீட்டர் (Clear span) அகலத்திலும், சாலை மட்டத்திலிருந்து 5. 50 மீட்டர் செங்குத்து உயரத்திலும் தற்போதைய கால்வாய் மட்டம் (Bed level) மாறாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   ரூ. 2 கோடி மதிப்பில்  நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் அழகு மீனா  நேற்று  நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here