மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் நவிமும்பை வந்தடைந்த எல்பிஜி டேங்கர் கப்பல்

0
21

மேற்கு ஆசிய போருக்கு மத்​தி​யில் 15,400 டன் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய வாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த கப்​பல் நவி மும்பை துறை​முகம் வந்​தடைந்​தது.

மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. எனினும், மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதையடுத்​து, ஈரான் அரசு இந்​தி​யா​வுக்கு வர வேண்​டிய கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு கப்​பலை விடு​வித்து வரு​கிறது. அந்த வகை​யில், இந்​தி​யக் கப்​பல் ஒன்​று, ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து நவி மும்​பை​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு துறை​முக ஆணை​யத்​துக்கு (ஜேஎன்​பிஏ) நேற்று வந்து சேர்ந்​தது.

இது குறித்து ஜேஎன்​பிஏ வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஹார்​முஸ் ஜலசந்​தியை வெற்​றிகர​மாகக் கடந்து வந்த ‘கிரீன் ஆஷா’ என்ற இந்​தி​யக் கொடி ஏந்​திய எல்​பிஜி கப்​பலை ஜேஎன்​பிஏ பெருமையுடன் வரவேற்​றது. இக்​கப்​பல் பிபிசிஎல் – ஐஓசிஎல் நிறுவனங்​களால் இயக்​கப்​படும் ஜேஎன்​பிஏ-​வின் திரவ சரக்கு தளத்​தில் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.போர் தொடங்​கிய பிறகு ஜேஎன்பிஏ-வை வந்​தடை​யும் முதல் கப்​பல் இது.

இக்​கப்​பல் 15,400 டன் எல்​பிஜி-யைக் கொண்டு வந்​துள்​ளது கப்​பல், அதன் சரக்கு மற்​றும் ஊழியர்​கள் அனை​வரும் பாது​காப்​பாக உள்ளனர். சிக்​கலான புவி​சார் அரசி​யல் சூழல்​களுக்கு இடையிலும் கடல்​சார் செயல்​பாடு​கள் இயங்​கும் திறனை இந்த வருகை எடுத்​துக்​ காட்​டு​கிறது. அதேவேளை​யில் நாட்​டுக்கு அத்தியா​வசி​ய​மான எல்​பிஜி விநி​யோகத்தை இது உறுதி செய்கிறது” என கூறப்​பட்​டுள்​ளது.

இது, கன்​டெய்​னர் மற்​றும் திரவ சரக்​கு​களைக் கையாளும் முக்கிய துறை​முகங்​களில் ஒன்​றாகும். இது நாட்​டின் எரிசக்தி விநி​யோகச் சங்​கி​லி​யில் முக்​கிய பங்கு வகிக்​கிறது என்​று அதிகாரி​கள்​ தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here