Home கன்னியாகுமரி செய்திகள் பூட்டேற்றி: சடலமான நிலையில் மாற்றுத்திறனாளி

பூட்டேற்றி: சடலமான நிலையில் மாற்றுத்திறனாளி

0

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (75). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் குலசேகரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து தற்போது பூட்டேற்றி அருகே காந்தி நகர் காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது மனைவியே மருத்துவமனையில் வைத்து பாதுகாத்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் மீண்டும் அவர்களுடன் செல்லாமல் பூட்டேற்றி பகுதிக்கு வந்து தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று(ஜன.2) காலையில் காந்தி நகர் காலனி பகுதியில் ஒரு கடையின் முன்பக்கம் அருணாச்சலம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அருணாச்சலம் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் உடல் நலக் குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version