பஹல்காமில் உள்ளூர் தீவிரவாதிகள் தாக்கி இருக்கலாம்: ப.சிதம்பரம் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

0
129

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சமீபத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டி அளித்தார்.

அப்போது “பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருக்கினறனவா? அவர்கள் உள்ளூரை சேர்ந்த தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். அந்த தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை.

பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு என்ஐஏ என்ன செய்​தது. இது​போன்ற கேள்வி​களுக்கு மத்​திய அரசு பதில் அளிக்​காதது ஏன்? ஆபரேஷன் சிந்​தூரில் இந்​திய தரப்​பில் ஏற்​பட்ட சேதம் என்ன? இவற்றை பற்றி எல்​லாம் பிரதமர் மோடி பேசாதது ஏன்​?’’ என்று பல கேள்வி​களை எழுப்​பி​னார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா நேற்று தனது எக்ஸ் வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா மீது தீவிர​வாத தாக்​குதல் நடை​பெறும் போதெல்​லாம், பாகிஸ்​தானை பாது​காக்க காங்​கிரஸ் முந்​திக் கொள்​ளும். அது​போல் மீண்​டும் ஒரு முறை பஹல்​காம் தாக்​குதல் குறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் கருத்து தெரிவிக்​கின்​றனர்.

ஒவ்​வொரு முறை​யும் பாகிஸ்​தான் தூண்​டு​தலின் பேரில் நடை​பெறும் தீவிர​வாதத்தை நமது பாது​காப்​புப் படைகள் போரிட்டு தடுக்​கின்​றன. ஆனால், இந்​தி​யா​வின் எதிர்க்​கட்​சி​யினர் என்​பதை விட பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தின் வழக்​கறிஞர்​கள் போல் காங்​கிரஸ் தலை​வர்​கள் செயல்​படு​கின்​றனர்.

நாட்​டின் பாது​காப்பு என்று வரும் போது, தெளி​வின்மை இருக்க கூடாது. ஆனால், நமது எதிரி நாடான பாகிஸ்​தானை பாது​காக்கும் வகையில் காங்​கிரஸ் கருத்து தெரிவிக்கிறது. இவ்​வாறு அமித் மாள​வியா கூறி​யுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here