மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31-ல் மதுக்கடைகள் மூடல்

0
21

மகாவீர் ஜெயந்தி தினத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது, மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மார்ச் 31-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்​னிட்டு தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை மற்​றும் தமிழ்​நாடு மது​பான உரிமம் மற்​றும் அனு​மதி விதி​களின்​கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக் மது​பான சில்​லறை விற்​பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்​கள், கிளப்​பு​களை சார்ந்தபார்​கள், ஹோட்​டல்​களை சார்ந்த பார்​கள் மற்​றும் உரிமம்கொண்ட மது​பான விற்​பனை​யகங்​கள், மது​பான கூடங்​கள் அனைத்​தும் கண்​டிப்​பாக மூடப்பட வேண்​டும்.

மார்ச் 31ம் தேதி (செவ்​வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது. மீறி​னால் மது​பானம் விற்​பனை விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here