Home தேசிய செய்திகள் காஷ்மீருக்குள் நுழைந்த லஷ்கர் தீவிரவாதி உண்மை நிலவரம் அறிந்து மனம் மாறினார்

காஷ்மீருக்குள் நுழைந்த லஷ்கர் தீவிரவாதி உண்மை நிலவரம் அறிந்து மனம் மாறினார்

0

பாகிஸ்​தானின் லாகூரைச் சேர்ந்​தவர் முகமது உஸ்​மான் ஜாட். இவர் லஷ்கர் இயக்​கத்​தில் சேர்ந்து தீவிர​வாத பயிற்சி பெற்று காஷ்மீருக்​குள் நுழைந்​தார். அவர் இங்கு வந்​த​பின், காஷ்மீர் மக்​களின் இயல்பு வாழ்க்கை அவருக்கு ஆச்​சர்​யத்தை அளித்​தது. தீவிர​வாத முகாம்​களில் காஷ்மீர் பற்றி தங்​களுக்கு தவறான தகவல்​கள் தெரிவிக்​கப்​பட்​டதை உணர்ந்​தார்.

இதனால் அவரது மனம் தீவிர​வாதத்தை பரப்​பும் செயல்​களில் ஈடுபடவில்லை. மேலும் அவருக்கு தலை​யில் விழுந்த வழுக்கை தாழ்வு மனப்​பான்​மையை ஏற்​படுத்​தி​யது. இதனால் அவர் முடிமாற்று சிகிச்சை செய்து கொள்​வ​தில் தனது கவனத்தை திசை திருப்​பி​னார். ஸ்ரீநகரில் அவர் தங்​கி​யிருந்​த​போது பாகிஸ்தான் தீவிர​வா​தி​கள் ஜார்​கம் மற்​றும் அப்​துல்லா என்ற அபுஹூரேரா ஆகியோர் அவருக்கு அறி​முக​மாகினர்.

அவர்கள் முடி​மாற்று சிகிச்சை நிபுணரிடம் முகமது ஜாட்டை அழைத்​துச் சென்று சிகை அலங்​காரம் செய்​துள்​ளனர். அதன்​பின் முகமது ஜாட் ஜம்​மு, பஞ்​சாப் போன்ற இடங்​களுக்கு பேருந்​துகளில் சகஜ​மாக பயணம் செய்​துள்​ளார். அவர் இந்​தி​யர்​களை போன்று ஆதார் அட்​டை, பாஸ்​போர்ட் பெறும் முயற்​சிகளி​லும் ஈடு​பட்டு வெளி​நாடு செல்ல திட்​ட​மிட்​டார்.

இந்​நிலை​யில் முகமது ஜாட், அப்​துல்லா ஆகியோரை ஸ்ரீநகர் போலீ​ஸார் கடந்த மாதம் சுற்​றிவளைத்து கைது செய்து என்ஐஏ அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். அவர்​கள் நடத்​திய விசாரணையில், முகமது ஜாட் காஷ்மீர் வந்​த​பின் மனம் மாறியது தெரியவந்தது. இதே​போல் கடந்த 2012-ல் காஷ்மீருக்​குள் நுழைந்த உமர் என்ற பாக். தீவிர​வா​தி​யும், மனம் மாறி ராஜஸ்​தானில் போலி ஆவணங்​கள் பெற்று கடந்த 2024-ல் இந்​தோ​னேஷியா தப்பிச் சென்​றுள்​ளார்​ என என்​ஐஏ அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version