குறும்பனை: புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா

0
237

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பாக புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா குறும்பனை, பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று (15-ம் தேதி). நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மிடாலக்காடு கிளை தலைவர் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை பொதுசெயலாளர் வேலாயுதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்க இலக்கியம் எனும் சிந்துசமவெளி திறவுகோல் என்ற நூலினை வாசித்து கருத்துகளை பதிவுசெய்த வாசிப்பாளர்கள் கருத்துகளை உள்ளடக்கி சிந்துசமவெளி நூற்றாண்டை கொண்டாட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கிபேசினார். நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹசன், மாநிலக்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட பொருளாளர் அருள்மனோ, மாவட்ட துணைச் செயலாளர் மிகைலான், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தகுமார், றோஸ்றாபின், சுஜாமி, பென்னட்ராஜ், ரெஜிமோள், சனல், முரளீதரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர் இருதயராஜ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here