குமரி மாவட்டத்தின் முட்டம் கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடற்கரை பாறையில் இளைஞர்கள் சிலர் நேற்று நடமாடியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சிலர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
