Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.

குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.

0

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரி சேதமடைந்ததோடு, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்து, சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version