கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவு கொண்டு வரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோழிக்கழிவு மற்றும் மருத்துவ கழிவு கொண்டு வரும் வாகனங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.














