கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதித் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெறுவர். இந்தத் தேர்வு மூலம் திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாநில அளவில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
