கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஸ்டாலின் பதவிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் திறக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், “இரவு 11 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படாவிட்டால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும்” என வியாபாரிகள் நேற்று எஸ்பி-ஐ சந்தித்து மனு அளித்தனர்.














