கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அரசு ரூ. 25 கோடியில் 54 சாலைகள் மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் துவக்க விழா நேற்று மாலையில் தொலையாவட்டம் பகுதியில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பட் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைத் துவக்கி வைத்தனர்.