நித்திரவிளை வழியாக கேரளாவிற்கு அரசு மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் காரை மடக்கிச் சோதனை செய்தனர். இதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 26 கேன்களில் மொத்தம் 1000 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் கண்டறியப்பட்டது. மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் ஜஸ்டின் ராஜ், மண்ணெண்ணெய் மற்றும் காரை நாகர்கோவில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் போலீசார் ஒப்படைத்தனர்.














