கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2.12.2024 காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில், குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக 2 பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சமர்பித்து பயன் பெறலாம்.














