Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: ரூ 8 கோடியுடன் நள்ளிரவில் வந்த கண்டெய்னர் லாரி

குமரி: ரூ 8 கோடியுடன் நள்ளிரவில் வந்த கண்டெய்னர் லாரி

0

குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பெட்டி பெட்டியாக 8 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ரிசர்வ் வங்கியில் இருந்து கேரள மாநில வங்கி பரிமாற்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் இது என விசாரணையில் தெரியவந்தது. உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு, அந்த பணம் போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version