உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 – ம் தேதி தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு இன்று 2-ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
இதை ஒட்டி நேற்று மாலை அனைத்து கல்லறை தோட்டங்களும் சுத்தப்படுத்தப்பட்டு புல் புதர்கள் அகற்றப்பட்டன. இன்று மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஊர்வத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர்.
மேலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்ப பணியாளர்கள் புனித நீர் தளித்து வேண்டுதல் செய்கின்றனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.