மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த குமரி கலெக்டர் அழகு மீனா, நேற்று 7-ம் தேதி விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க மேம்பாலத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.














