நாகர்கோவில் ஒழுகினசேரி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சதீஷ் ராஜன் (23) என்பவர், கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பிரியா (22) கண்விழித்துப் பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உறவினர்கள் உதவியுடன் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சதீஷ் ராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














