Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: நெடுஞ்சாலையில் லாரி மோதி கம்பம் சாய்ந்தது

குமரி: நெடுஞ்சாலையில் லாரி மோதி கம்பம் சாய்ந்தது

0

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரி மற்றும் மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், அருகிலிருந்த மின் கம்பம் சாய்ந்தது. பொதுமக்கள் காயமடைந்த ஓட்டுநர்களை மீட்டனர். மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, கம்பத்தை அகற்றினர். தக்கலை தீயணைப்புத் துறையினர் லாரிகளை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைத்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்தனர். இந்த துரித நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version