கிள்ளியூர், ஊரம்பு பகுதி சந்தையில் நேற்று வாங்கிய செம்பல்லி மீனை சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நெய்யற்றின் கரை அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனில் ரசாயனம் தடவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
            

