குமரி மாவட்டம் பள்ளிவிளை பகுதியில் காமராஜர் படிப்பகத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய் கொடுத்து காமராஜர் வெங்கல சிலை அமைக்கப்பட்டது, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, குமரி மாவட்டத் தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த சாலைகளை சீரமைக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்து வலியுறுத்தி, ரூபாய் 14 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்க நிலையில் உள்ளன. கூடிய விரைவில் இந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குமரி மாவட்டத்தில் பாஜக வளர காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றங்களைச் சொல்வார்கள். ஆனால், அதற்கு இடங்கொடுக்காமல் எங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம் என கூறினார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.