குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதான ராஜரத்தின ராமசாமி, நேற்று மதியம் தனது தோட்டத்தில் மதுவுடன் களைக்கொல்லி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். ராமசாமி ஏற்கனவே இரண்டு முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.