குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக தடுப்பணை வழியாக சென்று வந்த வாகனங்கள் குழித்துறை பாலம் வழியாக சென்றன. இந்த நிலையில் தற்போது மழை குறைந்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து, தடுப்பணையில் பாய்ந்து சென்ற தண்ணீரும் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள மதகுகள் வழியாக பாய்ந்து செல்ல தொடங்கியது.
இதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின் தடுப்பணையின் இரு பக்கங்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு அகற்றப்பட்டு வாகனங்கள் செல்லவும் பொதுமக்கள் நடந்து செல்லவும் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டது.
            













