குலசேகரம், மாமுடு பகுதியில் 19 ஆண்டுகளாக ஜெபகூட்டம் நடத்தி வரும் ஒருவர், தனது கட்டிடத்தை புதுப்பிக்க பேரூராட்சிக்கு வரைபட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில், இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட இந்து முன்னணியினர், பின்னர் செயல் அலுவலரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், கூட்டத்தில் கட்டிட புதுப்பிப்புக்கு அனுமதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.