Home கன்னியாகுமரி செய்திகள் குலசேகரம்:  பெயிண்டிங் தொழிலாளி மர்ம மரணம்

குலசேகரம்:  பெயிண்டிங் தொழிலாளி மர்ம மரணம்

0

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் கமாலியேல் (50). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று பிணந்தோடு பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் பாசிகளைத் தண்ணீர் பிரஷர் பம்பு மூலம் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கமாலியேல் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version